செப்.18- ஆம் தேதி ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் தொடங்குகிறது புரட்டாசி உத்சவம்!

Photo: Sri Srinivasa Perumal Temple

 

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் (Sri Srinivasa Perumal Temple) வரும் செப்டம்பர் 18- ஆம் தேதி புரட்டாசி உத்சவம் (Purattasi Uthsavam) தொடங்கவுள்ளதாக இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகளின் வேலைகள் குறைவு

இது தொடர்பாக இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி உத்சவம் வரும் செப்டம்பர் 18- ஆம் தேதி தொடங்கி, வரும் அக்டோபர் மாதம் 17- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 06.00 மணிக்கு சுப்ரபாதமும், காலை 06.45 மணிக்கு திருமஞ்சனமும், தோமாலை சேவையும், காலை 07.30 மணி முதல் 09.30 மணி வரை ஸ்ரீ விஷ்ணு ஹோமமும், நவராத்திரி மற்றும் உபய நாட்களில் மட்டும் காலை 09.30 மணிக்கு திருக்கல்யாணமும், மாலை 05.30 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு ஹோமமும், மாலை 06.00 மணிக்கு திருக்கல்யாணமும் இரவு 08.00 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

சிங்கப்பூர் முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்

வியாழன்கிழமைகளில் மட்டும் காலை 07.30 மணிக்கு நேத்ர சேவையும், முத்தங்கி சேவையும், இரவு 07.30 மணிக்கு பூலங்கி சேவையும், சனிக்கிழமைகளில் மட்டும் காலை 06.00 மணிக்கு சுப்ரபாதமும், காலை 06.45 மணிக்கு தோமாலை சேவையும், காலை 07.30 மணிக்கு கோ பூஜையும், காலை 07.00 பிரசாதம் விநியோகமும், காலை 07.30 மணிக்கு முத்தங்கி சேவையும், காலை 08.30 மணிக்கு மீண்டும் பிரசாதம் விநியோகமும், காலை 09.30 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு ஹோமமும் காலை 11.00 மணிக்கு அன்னதானமும், மாலை 05.30 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு ஹோமமும், மாலை 06.00 மணிக்கு பிரசாதம் விநியோகமும், இரவு 07.00 மணிக்கு உபய பூஜையும், இரவு 07.30 மணிக்கு சுவாமி புறப்பாடும், பிரசாதம் விநியோகமும் நடைபெறும்.

சிங்கப்பூரின் அதிபராக தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்பு!

புரட்டாசி சனிக்கிழமைகளில் சுப்ரபாதம் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் அதற்கான ரசீதை கோயில் அலுவலகத்தில் காலை 06.00 மணி முதல் காலை 06.30 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். புரட்டாசி சனிக்கிழமைகளில் சுப்ரபாதத்தின் நேரடி ஒளிபரப்பை (காலை 6:00 மணி) பக்தர்கள் https://www.facebook.com/hinduendowmentsboard , https://www.youtube.com/hinduendowmentsboard என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். புரட்டாசி உத்சவம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, 62985771 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.