சிங்கப்பூரின் அதிபராக தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்பு!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களமிறங்குகிறார் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம்!
Photo: Tharman Shanmugaratnam/Facebook

 

சிங்கப்பூரின் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான இஸ்தானாவில் இன்று (செப்.14) நடைபெறும் நிகழ்ச்சியில், நாட்டின் 9வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் முறைப்படி பதவியேற்றுக் கொள்கிறார்.

காலணிகளில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்த பயணி! (வைரலாகும் வீடியோ)

புதிய அதிபர் பதவியேற்பு விழாவில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அமைச்சர்கள், சிங்கப்பூர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சிங்கப்பூரின் அதிபராகப் பதவியேற்க உள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 01- ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர் அதிபர் தேர்தலில், தர்மன் சண்முகரத்னம் சுமார் 70.41% வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் பதவியில் இருந்து விடைப்பெற்றார்….பிரியா விடை அளித்த இஸ்தானா ஊழியர்கள்!

மிகச்சிறந்த பொருளாதார நிபுணராக இருக்கும் தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூரின் நிதித்துறை, கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ள அவர், நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் என்பது நினைவுக்கூறத்தக்கது.