கார் பானட்டின் உள்ளே தூக்கத்தை போட்ட மலைப்பாம்பு – தெறித்த பொதுமக்கள்

கார் பானட்டின் உள்ளே தூக்கத்தை போட்டுக்கொண்டிருந்த மலைப்பாம்பு
TikTok

மரைன் டெரேஸில் (Marine Terrace) கார் பானட்டின் உள்ளே தூக்கத்தை போட்டுக்கொண்டிருந்த மலைப்பாம்பு ஒன்று சிக்கியது.

மலைப்பாம்பு கார் பானட்டின் உள்ளே இருப்பதைக் கண்ட பொதுமக்கள் சிலர், குச்சிகள் மற்றும் சாக்கு பைகளை கையில் எடுத்து பாம்பை பிடிக்க முயன்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வரும் சிங்கப்பூர் உட்பட சர்வதேச பயணிகளின் கவனத்திற்கு… பல பொருட்களுக்கு அனுமதி மறுப்பு

TikTok-ல் வெளியான இரண்டு தனித்தனி வீடியோக்களில் காரில் இருந்த மலைப்பாம்பை காண முடிந்தது.

இந்த சம்பவம் 57 மரைன் டெரேஸ் பகுதியில் நடந்ததாகத் தெரிகிறது.

காக்கி நிற சட்டை அணிந்த ஒரு பெண் மற்றும் இருவர் பாம்பை பிடிப்பதையும் காண முடிகிறது.

இது Reticulated இனத்தை சேர்ந்ததாகவும், மேலும் இது சிங்கப்பூரின் பூர்வீக இனமாக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த Reticulated மலைப்பாம்பு சிங்கப்பூரில் காணப்படுகிறது. அவ்வப்போது நகர்ப்புறங்களிலும் காணப்படுகிறது.

Singapore Pools டிக்கெட் எடுத்து ஏமாந்த பெண் – $400 மோசடி செய்யப்பட்டதாக பதிவிட்டு விழிப்புணர்வு