சிங்கப்பூரில் 8,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கு 7 புதிய தங்கும் விடுதிகள்..!

Quick Build Dormitories foreign workers
(Photo: Ministry of Manpower)

சிங்கப்பூரில் மொத்தம் 8,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கு ஏழு புதிய தங்கும் விடுதிகள் விரைவாக (QBD) கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

அந்த விடுதிகளில் ஊழியர்களுக்கு வாழ்க்கை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் எட்டு தங்கும் விடுதிகள் அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் கட்டப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் உள்ள ஒரு உணவகத்தை மூட உத்தரவு.

QBD விடுதிகள்

கிரான்ஜி (Kranji), அட்மிரால்டி (Admiralty) மற்றும் சுவா சூ காங் (Choa Chu Kang) ஆகிய இடங்களில் அமைந்துள்ள சமீபத்திய அந்த விடுதிகள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு செயல்படத் தொடங்கின.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் இது ஒரு பகுதியாகும்.

Westlite Kranji Way

விரைவாகக் கட்டிமுடிக்கப்பட்ட வெஸ்ட்லைட் கிரான்ஜி வே (Westlite Kranji Way) விடுதி சுமார் 1,300 படுக்கைகளை கொண்டுள்ளது, அதிக விசாலமான அறைகளையும் கொண்டுள்ளது.

ஒவ்வொரு அறையிலும் குறைந்தது 1மீ இடைவெளியில், ஐந்து ஒற்றை படுக்கைகள் உள்ளன.

பொதுவாக விடுதிகளில், 12 முதல் 16 ஊழியர்கள் இரட்டை படுக்கைகளில் உறங்குவர்.

அனுமதி

இந்த விரைவாக கட்டிமுடிக்கப்பட்ட விடுதிகளில் உள்ள ஒவ்வொரு அறையிலும் 10 பேர் வரை தங்க அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் ஊழியர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…