லிட்டில் இந்தியாவில் உள்ள ஒரு உணவகத்தை மூட உத்தரவு..!

சிங்கப்பூரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திருட்டில்
(PHOTO : Shutterstock)

சிங்கப்பூரில் கிருமித்தொற்று தடுப்பு நடவடிக்கையான பாதுகாப்பான இடைவெளி விதிமுறைகளை மீறியதாக லிட்டில் இந்தியாவில் உள்ள ஒரு உணவகத்தை 10 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் லிட்டில் இந்தியா Arcadeல் உள்ள The Banana Leaf Apolo என்ற உணவகத்திற்கு இந்த மூடல் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் ஊழியர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு.

மூடல் உத்தரவு

அந்த அறிவிப்பில், அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது இந்த மூடல் உத்தரவுக்கு பின்னர் நவம்பர் 5ஆம் தேதி அந்த உணவகம் மீண்டும் திறக்கப்படும் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது. இதன் மற்ற கிளைகள் வழக்கம்போல் இயங்கும்.

விசாரணை

அந்த உணவகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும், அது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனுமதி இல்லை

அங்கு திருமணங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த அனுமதி உள்ளதாகவும், பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்பது நிர்வாகத்திற்கு தெரியவில்லை என்பதும் கூடுதல் தகவல்.

இதனை தொடர்ந்து, அந்த உணவகத்தை 10 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து விமான பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…