குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து விமான பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதி..!

Singapore to lift border restrictions
(PHOTO: NYTimes)

சீனாவின் தலைநிலம் மற்றும் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும், அடுத்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) முதல் சிங்கப்பூர் தனது எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கும்.

இது அடுத்த மாதம் நவம்பர் 6 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் வேலையின்மை விகிதம் உயர்வு – ஆள்குறைப்பும் அதிகரிப்பு.

யாருக்கு பொருந்தும்?

சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் அல்லது நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள் அல்லாத அனைத்து பயணிகளுக்கும் இது பொருந்தும் என்று சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) தெரிவித்துள்ளது.

அக்டோபர் 30ஆம் தேதி மதியம் 12 மணி முதல், சீனா மற்றும் விக்டோரியா மாநிலத்திலிருந்து பயணிக்கும் பயணிகள் நவம்பர் 6 அல்லது அதற்குப் பிறகு சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு ஏர் டிராவல் பாஸ் (ATP) என்னும் அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.

நேரடி விமானங்கள்

அதாவது அந்த பயணிகள் சிங்கப்பூருக்கு நுழைவதற்கு 14 நாள்கள் முன்பு சீனாவின் தலைநிலம் அல்லது ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக நேரடி விமானங்கள் மூலம் அந்த இடங்களில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

சிங்கப்பூரில் வீட்டில் தங்கும் உத்தரவுகளில் தங்குவதற்கு கட்டணம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…