விமானத்தின் அட்டெண்டர் வேலையை கைவிட்டு, பாலர் பள்ளி ஆசிரியரான பெண்

quit-flight-attendant-ecda-preschool-teacher
Farhana

விமானத்தின் கேபின் குழுவில் பணியாற்றிய பெண்மணி ஒருவர், பாலர் ஆசிரியராக உருவெடுத்து இருப்பது எப்படி என்று சிலருக்கு ஆச்சரியமாக தோன்றலாம், ஆனால் அதை செய்து நிரூபித்துள்ளார் ஃபர்ஹானா பின்த் முகமது ஹசன்.

37 வயதான ஃபர்ஹானா GCE ‘O’ தகுதி பெற்று, பஹ்ரைன் Gulf ஏர்லைன்ஸில் விமானப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார்.

தாம் வேலைக்கு சேர்ந்த முதல் இரண்டு வருடங்களில், பெரியவர்களை விட குழந்தைகளுடன் பழகுவது அவருக்கு அவ்வளவு சிறப்பையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிங்கப்பூர் வருகை – எதற்காக தெரியுமா?

ஆகவே, அவர் சாதாரண கேபின் குழு உறுப்பினராக மட்டுமல்லாமல், பிள்ளைகளை பார்த்துக்கொள்ளும் பணியாளராகவும் சேர்ந்தார்.

அதற்காக அவர் பயின்ற பயிற்சி வகுப்புகள் இறுதியில் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

Farhana

விமானத்தில் பிள்ளைகளை பார்த்துக்கொள்ளும் பணியாளராக இருந்த அவருக்கு, தன் கனவை பெரிதாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அது தான் அவரை பாலர்பள்ளி ஆசிரியராக மாற வழிவகை செய்தது, ஆம் தற்போது அவர் பிஞ்சு குழந்தைகளின் ஆசிரியராக மாறியுள்ளார்.

ஃபர்ஹானா PCF Sparkletots பாலர் பள்ளியில் 2010 இல் உதவி ஆசிரியராக சேர்ந்தார். அந்த பணியில் சாதித்தும் வருகிறார்.

தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து அந்த வழியை இலகுவாக்கி சாதித்து காட்டிய இந்த சிங்கப்பூர் பெண் நமக்கு ஒரு முன் உதாரணம் தான்.

சிங்கப்பூர் முழுவதும் 145 பேர் கைது – அதிரடி சோதனை