“அம்மாவுக்கு உடம்பு முடியல, மகன் படிப்பு செலவு”… அலுவல வேலையை விட்டு, துப்புரவு வேலை பார்த்து இரு வீடுகள் வாங்கிய ஊழியர்!

quits office job buys 2 houses

சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு கட்டுப்படாமல் தனக்கு பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்ததற்காக சீன பெண் ஒருவர் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

தன மனசு என்ன சொல்லியதோ அதனை பின்பற்றிய அவர், தற்போது இரண்டு வீடுகளையும் இரண்டு கார்களையும் வாங்கியுள்ளார் என்பது அனைவரின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லியு என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், தனது அலுவலக வேலையை வேண்டாம் என விட்டுவிட்டு, துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிந்த வெற்றி கதையை பகிர்ந்து கொண்டார்.

50 சதவீத வாகனங்களில் பூஜ்ஜிய புகை வெளியேற்றம்: 2030 டார்கெட் – மாசுபாட்டை குறைக்க சிங்கப்பூர் திட்டம்

அவரின் தாயிக்கு நோய் ஏற்பட்டு, மகன் பள்ளிப்படிப்பை தொடங்கிய பின்னர் அவரின் குடும்ப செலவுகள் அதிகரித்தன.

இப்படி இருக்கும் நிலையில் அலுவலகத்தில் வேலைபார்த்து வந்த அவர், “பல்வேறு செலவுகளுக்கு பணம் தேவை என்று தனக்கு தெரிந்ததால் அந்த வேலையை விட்டுவிட்டு துப்புரவுப் பணியாளராக வேலை செய்ய முடிவு செய்தேன்” என்று கூறினார்.

அவர் தாம் துப்புரவுப் பணியாளராக வேலை செய்வதை யாருக்கும் சொல்லாமல், இவ்வளவு ஏன் தன் பெற்றோருக்கு கூட சொல்லாமலே வேலை செய்துவந்துள்ளார்.

இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பார்த்த அவருக்கு கிடைத்த பலன், இரண்டு வீடுகள் மற்றும் இரண்டு கார்கள் வாங்குவதற்குத் தேவையான செல்வத்தை அவரால் சம்பாதிக்க முடிந்தது என்று கூறியுள்ளார்.

அவர், காலை 7 மணி முதல் அதிகாலை 2 மணி வரை.. அதாவது ஒரு நாளைக்கு 17 மணிநேரம் வேலை செய்வாராம்.

இஷ்டப்பட்ட வேலையை செய்துகூட நம்மால் சாதிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

வெளிநாட்டு பணிப்பெண்ணை பல முறை நாசம் செய்த வேலை இல்லா ஆடவர்: 24 ஆண்டுகள் சிறை, 24 பிரம்படி