பொது இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தி, போலீசாரை இனரீதியாக அவமதித்த ஆடவருக்கு அபராதம்

Singapore job scam money mules
File Photo : Singapore Police

பொது இடத்தில் தேவை இல்லாத சலசலப்பை ஏற்படுத்திய ஆடவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார், பின்னர் அந்த ஆடவர் போலீஸ் அதிகாரியை அவதூறாகவும், இன ரீதியாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

பொது இடத்தில் தொந்தரவு செய்தது மற்றும் ஒழுக்க கேடாக நடந்துகொண்டதற்காக ஒவ்வொரு குற்றத்தையும் ஒப்புக்கொண்ட பிறகு, 31 வயதாகும் ஓய் ஜியா ஜூன்க்கு S$3,800 அபராதம் இன்று வியாழன் (டிசம்பர் 23) விதிக்கப்பட்டது.

விடுதி ஊழியர்கள் இருவருக்குள் சண்டை: சக ஊழியரை அடித்து, கடித்து காயப்படுத்திய இந்திய ஊழியருக்கு சிறை!

கடந்த அக்டோபர் 20ஆம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் Anchorvale ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் சிங்கப்பூரரான அவர் சத்தமாக கத்திக்கொண்டு கதவைத் தட்டியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் அவரை அமைதியாக இருக்கும்படி பலமுறை கூறியும் அவர் அதை மறுத்துள்ளார். அவர் ஏன் இப்படி செய்தார் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்தவில்லை.

பின்னர் ஓய் கைது செய்யப்பட்டு போலீஸ் காரில் வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து, ஆய்வாளர் நூர் யூஸ்மான் அப்துல் கானியை, ஓய் அநாகரீகமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

அதே அதிகாரி மீது அவர் இன ரீதியாக அவமதிப்பு செய்ததாகவும் நீதிமன்றம் விசாரித்தது.

இதற்காக ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை மற்றும் S$5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு