“நீங்கள் இந்தியா.., நீங்கள் மிக மோசமானவர்”- சிங்கப்பூரில் இனவாத கருத்துக்களை கூறிய வாடகை கார் ஓட்டுநர்

racist-passenger-india-Singapore
Pic: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூரில் வாடகை கார் ஓட்டுநர், பயணியிடம் இனவாத வார்த்தைகளை சொல்லி கொச்சைப்படுத்திய சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக TADA நிறுவனம் கூறியுள்ளது.

இது குறித்து அந்த பயணி தனது பேஸ்புக் பதிவில் கூறிய பிறகு, அந்த வீடியோக்கள் சனிக்கிழமை (செப். 23) முதல் சமூக ஊடகங்களில் தீயாக பரவியது.

“சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு இன்றியமையாது” – தடபுடலாக நடக்கும் ஊழியர்களுக்கு சிறப்பு விருந்து

“Jan Hoeden” என்ற பெயரில் வெளியான அந்த பதிவில் பெண் கூறியது, பயணத்திற்கு தவறான பாதையை கொடுத்ததாக ஓட்டுநர் குற்றம் சாட்டியதாக சொன்னார்.

பின்னர், ஓட்டுநர் சத்தம் போடுவதையும் காணொளியில் கேட்கலாம். மேலும் ஒரு கட்டத்தில்: “நீங்கள் இந்தியா.., நான் ஒரு சீனர்… நீங்கள் மிக மோசமானவர் …” என்று அவர் இனவாத கருத்துக்களை கூறினார்.

ஆனால் திருமதி ஹோடன் இந்தியர் இல்லை என்றும், தான் சிங்கப்பூர் யூரேசியன் என்றும் பேஸ்புக்கில் தெரிவித்தார்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை இன்ஸ்டாகிராமில் கருத்து வெளியிட்ட TADA, “இனவெறி, பாகுபாடு அல்லது எந்தவிதமான துன்புறுத்தலையும் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கூறியது.

நடந்ததை முழுமையாகப் அறிந்துகொள்வதற்காக விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

மேலும் விசாரணையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்பதையும் TADA உறுதிப்பட கூறியுள்ளது.

“ராட்சத ராஜநாகம் vs மலைப்பாம்பு”… 7 மணிநேரம் நடந்த சண்டை.. இறுதியில் வென்ற ராஜநாகம் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்