ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் ராகு கேது பெயர்ச்சி பூஜைகள்!

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் ராகு கேது பெயர்ச்சி பூஜைகள்!
Photo: HEB

 

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ராகு கேது பெயர்ச்சி பூஜைகள் நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

கண்டெடுக்கப்பட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைக்க வழிவகை செய்த வெளிநாட்டு ஓட்டுநர் சுரேஷ் – குவியும் பாராட்டு

இது தொடர்பாக, இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் அக்டோபர் 08- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு மேஷம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கும், கேது துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சியடைகின்றனர்.

ராகு கேது பெயர்ச்சியையொட்டி (Rahu Kethu Peyarchi Prayers), ஸ்ரீ வைராவிட காளியம்மன் கோயிலில் (Sri Vairavimada Kaliamman Temple) ராகு கேது பெயர்ச்சி பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் காலை 09.30 மணிக்கு சாந்தி ஹோமமும், மாலை 06.30 மணிக்கு த்ரிசதி அர்ச்சனை நடைபெறவுள்ளது. இதில், பக்தர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

திருமண விருந்தை உட்கொண்ட 30 பேருக்கு உடல்நிலை பாதிப்பு

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 62595238 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.