34 ஆண்டுகளுக்கு பின் ஒன்றுகூடிய ராமநாதபுரம் மாணவர்கள்; சிங்கப்பூரில் இருந்து விழாவுக்கு சென்ற ஊழியர் – நெகிழ்ச்சியான தருணம்!

PHOTO: Hindu Tamil

தமிழ்நாட்டில் சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றாக படித்த மாணவர்கள் அனைவரும் தற்போது ஒன்றாக கூடி சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

இராமநாதபுரம் மாவட்டம் – சாயல்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1987-88 களில் படித்த அவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி அந்த பள்ளியிலேயே நடந்துள்ளது.

சிங்கப்பூர்-திருச்சி விமானம் தாமதம்: தொடரும் தாமதம், காரணம் தான் என்ன?

நம் வாழ்க்கையில் நாம் எவ்வளவு கடந்தாலும் நம் நினைவை விட்டு நீங்கா இடம் பிடித்திருக்கும் ஒரு முக்கியமான காலம் என்றால் அது பள்ளி பருவம் தான்.

அதிலும் நம்முடன் பள்ளியில் படித்த நண்பர்களை சந்திக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று கூறலாம்.

அவ்வகையில், இந்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மகிழ்ந்தார்.

அருள்மலைச் செல்வன் என்ற 50 வயதுமிக்க அவர், சிங்கப்பூர் கினாக்ஸிஸ் சாப்ட்வேர் கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் தனது பள்ளி நண்பர்கள் குறித்த தேடலை தொடங்கினார்.

சமூக வலைதளங்கள் மூலம் ஒவ்வொருவராக சந்தித்து, தற்போது இந்த ஒருங்கிணைப்பு நிகழ்வை நடத்தி இருக்கிறார் அவர்.

இதில் அருள்மலைச் செல்வன், சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு இந்த நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார், பல்வேறு பகுதியில் இருந்து அவரின் நண்பர்கள் நேராகவும், வீடியோ கால் மூலமாகவும் கலந்துகொண்டனர்.

அவர்கள் அன்பை பரிமாறிக்கொண்ட தருணம் நமக்கே அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது, நட்பு தொடர வாழ்த்துக்கள்.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியருக்கு காவல்துறை சிறப்பு விருது – எதற்கு தெரியுமா?