கரப்பான் பூச்சி, பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு… சிங்கப்பூர் Rasel Catering நிறுவனத்திற்கு S$4,800 அபராதம்

Rasel Catering fined
Singapore Food Agency

உணவு பாதுகாப்பில் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து சிங்கப்பூர் Rasel Catering நிறுவனத்திற்கு S$4,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பொது சுகாதார (உணவு சுகாதாரம்) விதிமுறைகளின்கீழ், நேற்று ஜூலை 19 அன்று அபராதம் விதிக்கப்பட்டது.

“ஒரே ஒரு APP தான் Download செய்தேன்.. மொத்த பணமும் Close” – சிங்கப்பூரில் இருப்பவர்கள் உஷார்

சுகாதாரமற்ற உணவு குறித்து அங்கு உணவருந்திய நபர்களிடம் இருந்து சுமார் 345 புகார்களை பெற்றதாக சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) தெரிவித்துள்ளது.

உணவில் தரம் இல்லை என்று 2022 நவம்பர் மாதத்தில் இருந்து புகார்கள் பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர், MOH மற்றும் SFA ஆகியவற்றின் அதிகாரிகள் அந்நிறுவனத்தில் கூட்டு விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது, கரப்பான் பூச்சி நடமாட்டம், சுத்தம் செய்யாமல் உணவுப் பாத்திரத்தைப் பயன்படுத்துதல் மற்றும் உணவுப் பொருட்களில் நோய்க்கிருமிகள் இருப்பது போன்ற பல சுகாதாரக் குறைபாடுகளை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதிகாரிகள் விசாரணை செய்யும்போது எடுக்கப்பட்ட படங்களில் உயிருள்ள கரப்பான் பூச்சிகள் பாத்திரங்களில் நடமாடுவதையும் காண முடிந்தது.

அதன் பின்னர் அந்நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு இறுதியில் தற்காலிக தடையும் விதிக்கப்பட்டது.

மேலும் அந்நிறுவனத்தின் சுகாதாரத் தரம் “A” இலிருந்து “C” க்குக் குறைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

கார், லாரி மோதி கடும் விபத்து: 11 பேர் மருத்துவமனையில் அனுமதி