பள்ளிவாசல்கள் தாக்க திட்டம்: சமய அமைப்புகள் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் – அமைச்சர் சண்முகம்

(Photo : REUTERS)

சிங்கப்பூரில் 2 மசூதிகளைத் தாக்க திட்டம் தீட்டிய 16 வயது ஆடவரின் வழக்கைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள சமய அமைப்புகள் மேலும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்தார்.

பல்வேறு சமய அமைப்புகள் மிகவும் விழிப்புடன் இருப்பதை உறுதிசெய்ய, உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் MCCY (கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம்) ஆகியவையிடம் கேட்டுக் கொண்டதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மிகப்பெரிய அளவில் வியாபாரம்…ஊழியர்களுக்கு 16 மாதம் வரையிலான போனஸ் – Sheng Siong சூப்பர்மார்கெட்

மேலும், சமய அமைப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டம் தீட்டியதாக 16 வயது சிங்கப்பூரர் ஒருவர் சிங்கப்பூரின் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (ISA) கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதல்களின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளான மார்ச் 15 அன்று உட்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளை தாக்க அவர் திட்டம் தீட்டியிருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 2 பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்த திட்டம் – உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ஆடவர் தடுத்து வைப்பு