377A பிரிவு ரத்து செய்யப்படுவது என்பது “சமூகத்தின் கண்ணோட்டத்தை மாற்றுகிறோம் என்று அர்த்தமல்ல” – MCI

Pic: File/TODAY

ஆண்களுக்கு இடையிலான உறவுக்கான தண்டனைச் சட்டத்தின் 377A பிரிவை ரத்து செய்ய சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“இதனால் சமூகத்தின் கண்ணோட்டத்தை நாங்கள் மாற்றுகிறோம் என்று அர்த்தமல்ல” என்பதை தகவல், தொடர்பு அமைச்சகம் (MCI) தெரிவித்துள்ளது.

சட்டவிரோத சூதாட்டச் செயல்களில் ஈடுபட்டதாக ஏழு பேரிடம் போலீசார் விசாரணை

ஊடக உள்ளடக்கம் உள்ளிட்ட கொள்கை கோட்பாடுகளுக்கும் அது பொருந்தும் என்று இன்று (ஆகஸ்ட் 22) MCI தெரிவித்துள்ளது.

ஆண்களுக்கிடையேயான பாலுறவை குற்றமாக்கும் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற பிரதமர் லீயின் அறிவிப்புக்குப் பிறகு ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த MCI அதனை தெரிவித்தது.

ஓரினச்சேர்க்கை போன்ற மாற்று பாலினங்களை சித்தரிக்கும் படங்கள் சமூக மதிப்புகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று அந்த உள்ளடக்கக் குறியீடு குறிப்பிடுகிறது.

வயது வரம்புக்கு ஏற்ப மட்டும் அவர்களுக்கான படைப்புகள் கொண்டு சேர்க்க உறுதியளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலு பாண்டன் சமூக மன்றத்துக்கு அருகே விழுந்த பெரிய மரம்; அடியில் சிக்கிய இருவர்