அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- 100 பேர் பத்திரமாக வெளியேற்றம்!

Photo: Singapore Civil Defence Force

சிங்கப்பூரின் பிளாக் 116A ரிவர்வேல் டிரைவில் (Fire @ Blk 116A Rivervale Drive) உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அடுக்குமாடி குடியிருப்பின் 15- வது தளத்தில் உள்ள வீட்டில் நேற்று (09/10/2021) பிற்பகல் 01.40 PM மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் (Singapore Civil Defence Force- ‘SCDF’) தீயணைப்பு வீரர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

உலகின் மிக ஆடம்பரமான நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கு 8- வது இடம்!- ஆய்வில் தகவல்!

அதைத் தொடர்ந்து, சுவாசக் கருவிச் செட்டை (Breathing Apparatus Sets) அணிந்துக் கொண்டு, தீயணைப்பு வீரர்கள் அடுக்குமாடி குடியிருப்பின் 15- வது தளத்திற்கு சென்று தீ விபத்து நிகழ்ந்த வீட்டிற்கு சென்றனர். அங்கு படுக்கையறையில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததைப் பார்த்த வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும் அந்த அறையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து தீக்கரையானது. வீட்டில் யாரும் இல்லாததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதனிடையே, தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்னர், தீ விபத்து நிகழ்ந்த அந்த வீட்டில் இருந்தவர்களில் பெண் ஒருவர் 15- வது தளத்திற்கு திரும்பினார். இந்த நிலையில், லிப்ட் நிறுத்துமிடம் வரை கடுமையான புகை வெளியேறிய நிலையில், புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட, அந்த பெண் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் (Singapore General Hospital For Smoke Inhalation) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

உலகின் மிக பாதுகாப்பான நகரங்களில் சிங்கப்பூருக்கு 3வது இடம்!

தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்னதாக, தீ விபத்து நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சுமார் 100 பேர் தாங்களாகவே பத்திரமாக வெளியேறினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.