உலகின் மிக பாதுகாப்பான நகரங்களில் சிங்கப்பூருக்கு 3வது இடம்!

Singapore import electricity Malaysia
(PHOTO: Wallpaper Flare Website)

COVID – 19 நோய்ப்பரவல் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட, 2021 ஆண்டின் உலகின் மிக பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் 3வது இடத்தைப் பெற்றுள்ளது.

The Economist Newspaperன் தகவல் பிரிவு 2021ம் ஆண்டின் பாதுகாப்பான நகரங்களுடைய வருடாந்திரப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

நவம்பர் 15 முதல், இந்த நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே சிறப்பு பயண ஏற்பாடு!

இப்பட்டியல் 60 நகரங்களை, 76 பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது.

இப்பட்டியலில் டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகன் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

சுகாதாரம், மின்னிலக்கம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவைகளின் பாதுகாப்பில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

டொரோன்ட்டோ, சிட்னி, தோக்கியா ஆகிய நகரங்களும் பட்டியலில் முதல் 5 இடங்களில் வந்துள்ளது.

நோய்ப்பரவலுக்கு எதிரான தயார்நிலை மற்றும் COVID – 19 நோயால் மடிவோர் விகிதம் போன்ற அம்சங்கள் இந்த ஆண்டு பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் Terminal-1ல் தீ பிடித்தது…