நவம்பர் 15 முதல், இந்த நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே சிறப்பு பயண ஏற்பாடு!

Photo: Changi Airport

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பயணம் செய்வதற்காக சிங்கப்பூருக்கும், தென் கொரியாவிற்கும் இடையே, நவம்பர் மாதம் 15ஆம் தேதியிலிருந்து சிறப்பு பயண ஏற்பாட்டை தொடங்கவிருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திற்கும், இன்ச்சியோன் அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையே, சிறப்பு பயண ஏற்பாடு திட்டத்தின் அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பயணம் செய்யலாம் என்று அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா நிலவரம் குறித்து நாளை உரையாற்றவிருக்கும் பிரதமர் லீ சியன் லூங்!

சிறப்புப் பயண ஏற்பாட்டுக்கு ஆதரவாக சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா COVID – 19 தடுப்பூசிச் சான்றிதழ்களை அங்கீகரிப்பதற்கு ஒப்புக்கொண்டன. இந்த அறிவிப்பும் நவம்பர் 15ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும்.

COVID – 19 கட்டுபாடு உத்தரவினால் வீட்டில் தங்குவது அல்லது தனிமைப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக அவர்கள் பயணம் செய்ய விரும்பினால் கண்டிப்பாக COVID – 19 PCR பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பயண நிரல் அல்லது ஆதரவாளர் தேவையில்லை என்றும் பயணத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனாவால் புதிதாக மேலும் மூன்று பேர் உயிரிழப்பு