தோ பாயோவில் ஒருவரை தாக்கி கொள்ளை அடித்த சந்தேக நபர் கைது!

508 nabbed illegal moneylending and scams
Photo: Getty

தோ பாயோ பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 59 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல் 2.20 மணியளவில், பாதிக்கப்பட்டவரிடமிருந்து தங்களுக்கு புகார் கிடைத்ததாக காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில், முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? – விளக்கம்

லோராங் 6 தோ பாயோவில் தெரியாத அந்த ஆடவரால் தாக்கப்பட்டு, S$210 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையிடம் கூறினார்.

காவல்துறையினர் புகார் கிடைத்த நான்கு மணி நேரத்திற்குள் அவரை கைது செய்தனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 394ன் கீழ், இந்த ஆடவர் மீது இன்று திங்கள்கிழமை கொள்ளை அடித்தது மற்றும் காயத்தை ஏற்படுத்தியது குறித்து நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

பேருந்தில் சிக்கி உயிரிழந்த ஆடவர் – கவனக்குறைவாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது!