“பேருந்து சேவை 35 புதிய பாதைக்கு திருப்பி விடப்படும்”- எஸ்பிஎஸ் டிரான்ஸிட் அறிவிப்பு!

Photo: SBS Transit Ltd

சிங்கப்பூரில் பொதுபோக்குவரத்து சேவை வழங்கி வரும் முக்கிய நிறுவனங்களில் ஒன்று எஸ்பிஎஸ் டிரான்ஸிட் லிமிடெட் (SBS Transit Ltd). இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து மற்றும் ரயில் சேவைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

பறந்து பறந்து சோர்ந்துபோன புறா… காரில் அமர்ந்து பயணம் செய்த சம்பவம்! – சிங்கப்பூர் வைரல் வீடியோ

இந்த நிலையில் எஸ்பிஎஸ் டிரான்ஸிட் லிமிடெட் நேற்று (10/01/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தானா மேரா கோஸ்ட் சாலையின் (Tanah Merah Coast Road) ஒரு பகுதி சீரமைப்பட்டிருப்பதால், பேருந்து சேவை 35 (பிடோக் பேருந்து நிலையத்தை நோக்கிச் செல்லும் திசையில்) புதிய சாலைக்குத் திருப்பி விடப்படும். சாங்கி கடற்படைத் தளத்திற்கு முன்னால் உள்ள பேருந்து நிறுத்தம் (பேருந்து நிறுத்தக் குறியீடு 96439) புதிய சாலைக்கு இடமாற்றம் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான, வழித்தட வரைபடத்தையும் எஸ்பிஎஸ் வெளியிட்டுள்ளது.

ஆசியான் மனித உரிமைகள் ஆணையத்தின் சிங்கப்பூரின் பிரதிநிதியாக டாக்டர் சஷி ஜெயக்குமார் மீண்டும் நியமனம்!

மேலும் கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஎஸ் டிரான்ஸிட் வாடிக்கையாளர் சேவை (SBS Transit Customer Care) எண்ணை 1800- 287- 2727 (தினமும் காலை 07.30 AM மணி முதல் இரவு 08.00 PM மணி வரை) தொடர்புக் கொள்ளவும் (அல்லது) www.sbstransit.com.sg என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.