நிலவில் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ!

நிலவில் ரோவர் தரையிறங்கிய வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ!
Photo: ISRO

 

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியில் வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தமிழகத்தின் எந்தெந்த நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை வழங்குகிறது? – விரிவான தகவல்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த ஜூலை 14- ஆம் தேதி அன்று சந்திரயான்- 3 விண்கலம் LVM- 3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக விண்ணில் பயணித்த சந்திரயான்- 3 விண்கலம், பல லட்சம் கிலோ மீட்டர் அருகே சென்ற நிலையில், விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகப் பிரிந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 23- ஆம் தேதி மாலை 06.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து, நான்காவது நாடாக நிலவில் தடம் பதித்தது இந்தியா. குறிப்பாக, நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரௌபதை அம்மன் மாலையிடுதல்!

இந்த நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய சில மணி நேரங்களில், ரோவர் சாய்வுப் பலகை மூலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி தனது ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக, இஸ்ரோ நிறுவனம், விக்ரம் லேண்டரில் உள்ள கேமராக்கள் எடுத்து அனுப்பி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், சந்திரயான்- 3 விண்கலத்தின் ‘பிரக்யான் ரோவர்’ மிகவும் மெதுவாக நிலவில் தரையிறங்கும் வீடியோவை வெளியிடப்பட்டுள்ளது. லேண்டரில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பிரக்யான் ரோவரின் சக்கரத்தில் பதிக்கப்பட்ட அசோக சக்கரம், இஸ்ரோ முத்திரை நிலவில் தடம் பதிக்கப்பட்டது.

நிலவின் தென்துருவத்தில் 500 மீட்டருக்கு சென்று பிரக்யான் ரோவர், நில அதிர்வு, மண்ணின் தன்மை, கனிமங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ள நிலையில், இஸ்ரோ வீடியோவை வெளியிட்டுள்ளது.