சிங்கப்பூர் தெங்கா விமானதளத்தில் புதிய மருத்துவ மையம் திறப்பு.!

RSAF medical centre open
Pic: Ministry of Defence

சிங்கப்பூர் விமானப்படையின் அடுத்த தலைமுறை மருத்துவ மையத்தை தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் அவர்களால் நேற்று (04-11-2020) அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்த மருத்துவ மையத்தில், பரிசோதனை மாதிரியை அளிக்கும் இடம், தனிமைப்படுத்தும் அறைகள் போன்ற வசதிகளுடன் கொள்ளை நோயை சமாளிக்கும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா: வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் புதிதாக பாதிப்பு..!

மேலும், புதுவகை தொழில்நுட்பங்கள் கொண்ட முன்னோட்டத் திட்டங்களும் இங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொலை சேவை, மருந்துகளை பெற்றுக்கொள்ள சுயச் சேவை, லாக்கர்கள் போன்றவை இந்த மருத்துவ மையத்தில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது ‌

உடல்நலம் சரியில்லாத சேவையாளர்கள் மற்றவர்களுடன் தொடர்பில் வராமல் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். திட்டம் வெற்றி பெற்றால், மற்ற ஆயுதப்படை மருத்துவ மையங்களிலும் இது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ மையத்தை திறந்து வைத்த தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் கூறுகையில், COVID-19 உலகை வந்து தாக்கும் சமயத்தில் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது என்றார்.

சிங்கப்பூரில் 3ஆம் கட்டத் தளர்வு: ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் நீடிக்கலாம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…