S Pass அல்லது work permit வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: ரெடியா இருங்க!

Work permit வேலை அனுமதியில் இப்படியும் மோசடி நடக்கும்.. சிக்கிய வேலைவாய்ப்பு முகவருக்கு சிறை
Pic: Unsplash

வெளிநாட்டு ஊழியர்களை புதிய திட்டத்தின் கீழ் சில நிறுவனங்கள் தற்காலிகமாக வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியும்.

இந்த புதிய திட்டம் இன்று செவ்வாய்கிழமை (டிச.13) முதல் தொடங்கப்பட்டது. இது S Pass அல்லது work permit கொண்ட ஊழியர்களுக்கு பொருந்தும்.

ஆனால், நிறுவனங்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதிபெற சிங்கப்பூரின் முக்கிய பொருளாதார முன்னுரிமை முயற்சிகளில் பங்களிக்க வேண்டும்.

லிட்டில் இந்தியாவில் உள்ள தமிழன் எக்ஸ்பிரஸ் கார்கோ நிறுவனத்தின் மீது சரமாரி புகார் – பொருளை அனுப்பிட்டு வருடக்கணக்கில் காத்திருக்கும் ஊழியர்கள் ஆதங்கம்

இந்த முயற்சியில் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் சர்வதேசமயமாக்கல் ஆகியவை அடங்கும்.

அதோடு சேர்த்து, நிறுவனங்கள் உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதையும் நிரூபிக்க வேண்டும்.

இதையெல்லாம் பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் S Pass அல்லது work permit கொண்ட அதிக வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியும்.

அத்தகைய பணியமர்த்தலுக்கான ஒதுக்கீட்டு முறையில், 50 ஊழியர்கள் வரை ஒரு நிறுவனம் வேலைக்கு எடுக்க முடியும்.

30 ஆண்டுகளாக இருக்கும் வழிபாட்டு தலத்தை அகற்ற இறுதி எச்சரிக்கை – கூடுதல் அவகாசம் கோரிக்கை