S Pass அல்லது work permit ஊழியர்களை அதிக அளவில் வேலைக்கு எடுக்க சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அனுமதி – இந்திய ஊழியர்களுக்கு முன்னுரிமை

Budget 2024 foreign workers
Pic: AFP

வெளிநாட்டு ஊழியர்களை புதிய திட்டத்தின் கீழ், சில நிறுவனங்கள் தற்காலிகமாக வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என செய்தி வெளியிட்டு இருந்தோம். அதில் குறிப்பாக இந்திய ஊழியர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஒரு புதிய திட்டத்தின் கீழ், சிங்கப்பூரின் முக்கியப் பொருளாதார முன்னேற்றத்தில் பங்குகொள்ளும் நிறுவனங்களுக்கு மட்டுமே அந்த சலுகை வழங்கப்படும். எல்லா நிறுவனங்களுக்கும் இது கிடையாது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

கட்டுமான தளத்தில் விபத்து… பலத்த சத்தம் – பதறிய ஊழியர்கள்: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

இந்த முயற்சியில் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் சர்வதேசமயமாக்கல் ஆகியவை அடங்கும். அதோடு சேர்த்து, நிறுவனங்கள் உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதையும் நிரூபிக்க வேண்டும்.

இதையெல்லாம் பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் S Pass அல்லது work permit கொண்ட அதிக வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியும். அத்தகைய பணியமர்த்தலுக்கான ஒதுக்கீட்டு முறையில், 50 ஊழியர்கள் வரை ஒரு நிறுவனம் வேலைக்கு எடுக்க முடியும்.

எனவே இது இந்திய ஊழியர்களுக்குப் பலனளிக்கும் என கருத்து கணிப்புகள் எழுந்துள்ளன.

இந்தியா, பங்களாதேஷ், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூர் அதிகம் ஈர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாகத் தொடங்கப்பட்ட சிறப்பு பொருளாதார முன்னுரிமைகளுக்கான (M-SEP) திட்டத்தின் கீழ் தகுதி பெறும் நிறுவனங்களில், தற்போது அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான S Pass மற்றும் work permit அனுமதி வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

“மெஷினை எப்படி இயக்குறதுன்னு தெரில”… முறையான பயிற்சி இல்லாததால் உயிரிழந்த ஊழியர்