சம்பள உயர்வினால் இத்தனை பேர் பயனடைகிறார்களா? – சிங்கப்பூரின் பொது சேவை பிரிவு தகவல்

salary increase in singapore

சிங்கப்பூர் அரசாங்கம் சமீபத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு 5 முதல் 14 விழுக்காடு வரையிலான சம்பள உயர்வு அறிவித்திருந்தது.இந்த சம்பள உயர்வினால் சுமார் 23000 அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்று பொதுச் சேவை பிரிவு (PSD) ஞாயிற்றுக்கிழமை (June 5) தெரிவித்தது .இந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் சம்பள சீரமைப்பு அமலுக்கு வருகிறது.

சிவில் சர்வீஸ் ஜெனரிக் திட்டங்கள் மற்றும் அவை சார்ந்த அதிகாரிகளுக்கு பொருந்தும் என்று கூறப்படுகிறது. இந்த சீரமைப்பு திட்டங்கள் சிவில் சர்வீஸ் சேவைகளை தொடர்ந்து ஈர்க்கவும், திறமைக்கு உரிய நியாயமான பங்கை தக்க வைக்கவும் உதவும் என்று சிங்கப்பூரின் பொது சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

மேனேஜ்மெண்ட் எக்ஸிக்யூட்டிவ் ஸ்கீம்,மேனேஜ்மெண்ட் சப்போர்ட் ஸ்கீம் மற்றும் கார்ப்பரேட் சப்போர்ட் ஸ்கீம் ஆகியவற்றிலுள்ள அரசு அதிகாரிகள் 5 முதல் 10 விழுக்காடு வரையிலான சம்பள உயர்வைப் பெறுவார்கள் என்று பொதுச்சேவை பிரிவு கூறியது.

OSS எனப்படும் செயல்பாட்டு ஆதரவு திட்டத்தில் உள்ளவர்கள் 6 முதல் 14 விழுக்காடு வரையிலான சம்பள மாற்றத்தை காண்பார்கள் என்று கூறப்படுகிறது.

குறைந்த சம்பள ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான முத்தரப்பு பணிக்குழுவின் அழைப்பிற்கு இது இணங்க உள்ளதாக PSD கூறியது. பிப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் பேசிய திரு.சான் நிர்வாக திட்டத்திற்கான ராஜினாமா விகிதம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 9.9 விழுக்காடு அதிகரித்ததாக கூறினார்.