சிங்கப்பூரில் சம்பளம் போதுமானதாக உள்ளதா? 10ல் 6 வெளிநாட்டு ஊழியர்கள் சொன்ன ஒரே பதில்!

Singapore oct changes jobs workers electricity
Pic: Julio Etchart

சிங்­கப்­பூ­ரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழி­யர்­கள், சம்­பள உயர்வை எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

கொரோனா சூழலுக்கு பிறகு வாழ்க்­கைச் செல­வி­னம் அதி­கரித்­து­ள்ளது. எனவே தங்­க­ளுக்­குச் சம்­பள உயர்வு வழங்­கு­வ­தன் தொடர்­பில் முத­லா­ளி­க­ளி­டம் வலி­யு­றுத்­த­ தயா­ராக உள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள பத்­தில் ஆறு ஊழி­யர்­கள் சம்­பள உயர்வு கோரத் தயா­ராக இருப்­ப­தாக தெரிய வந்துள்ளது.  25 முதல் 34 வய­தினர் மத்தியில் இந்த விகி­தம் 10க்கு 7ஆக உள்­ளது.

கடந்த ஆண்டு நவம்­ப­ரில் 17 நாடு­களில் கிட்­டத்­தட்ட 33,000 ஊழி­யர்­களிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது.

சம்­பள உயர்வு பெறத் தங்­களுக்­குத் தகுதி இருக்­கிறது என்ற நம்பிக்கை 75 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்ட ஊழி­யர்­களிடம் உள்ளது.

உல­க­ள­வில் பண­வீக்­கம் உயர்ந்­துள்­ள­தால், உல­கின் பல பகு­தி­களி­லும் வாழ்க்­கைச் செல­வி­னம் வேக­மாக அதி­க­ரித்து வரு­கிறது. .

சிங்­கப்­பூ­ரில் பத்­தில் ஐந்து ஊழி­யர்­கள் அடுத்த 12 மாதங்­களில் சம்­பள உயர்வை எதிர்­பார்ப்­ப­தா­க­வும் பத்­தில் நால்­வர் தங்­க­ளுக்கு போனஸ் வழங்­கப்­ப­டு­வதை எதிர்­பார்ப்­ப­தா­க­வும் தெரிய வந்துள்ளது.