படிப்படியாக ஊதியம் உயர்வதற்கான வழிமுறை ! – அடுத்த மாதம் கூடும் தேசிய சம்பள மன்றம்

foreign worker jailed illegal money transfer
Photo: salary.sg Website
எதிர்வரும் செப்டம்பர் முதல் தேதி தேசிய சம்பள மன்றம் கூடவிருக்கிறது.இந்த கூட்டத்தில் சம்பளம் மற்றும் வேலை தொடர்பான தனது வருடாந்திர வழிகாட்டிகளை உருவாக்கும்.கடந்த ஆண்டின் பொருளாதார மீட்பு நிலை,எதிர்கால உலக பொருளாதார நிலையின்மை போன்றவற்றின் அடிப்படையில் வழிகாட்டி உருவாக்கப்படும்.
இந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான சம்பள,வேலையிட வழிகாட்டிகள் அக்டோபர் மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் நேற்று தெரிவித்தது.குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான படிப்படியாக உயரும் சம்பள முறை பற்றியும் மன்றத்தில் ஆலோசிக்கப்படும்.
சென்ற ஆண்டு குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கான முத்தரப்பு பணிக்குழுவின் பரிந்துரைகள் வழிகாட்டிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சான்றாக,கடந்த ஆண்டின் வழிகாட்டிகளில் $2000 வரை சம்பளம் பெறும் குறைந்த வருமான ஊழியர்களின் ஊதியம் $70 முதல் $90 வரை உயரவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.