சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி!

NParks investigating alleged smuggling singapore to tamilnadu
Photo: Coimbatore Airport Official Twitter Page

சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

பிப்.14-ல் வரவு செலவுத் திட்ட அறிக்கையை தாக்கல் செய்கிறார் சிங்கப்பூர் நிதியமைச்சர்!

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ளது இளம்பிள்ளை. இங்கு பட்டுச் சேலைகள் அதிகளவில் உற்பத்திச் செய்யப்படுகிறது. இந்த சேலைகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இளம்பிள்ளையை அடுத்துள்ள தப்பக்குட்டை கிராமத்துக்கு அருகில் உள்ள கருப்பக் கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த 37 வயதான தொழிலதிபர், கடந்த சில தினங்களுக்கு முன்பு பணி நிமித்தமாக சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, சீன பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் சிங்கப்பூருக்கு வந்தடைந்தார். பின்னர், அங்கிருந்து வேறு விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (28/12/2022) வந்துள்ளார். அங்கு அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனையைச் செய்தனர். அதன் பின், அவர் விமான நிலையத்தில் இருந்து சேலத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.

“சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையா?”- இந்திய தூதரகம் விளக்கம்!

இந்த நிலையில், பரிசோதனை முடிவு இன்று (29/12/2022) மதியம் வெளியான நிலையில், அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். எனினும், அவருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் வீட்டு பகுதியில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டனர். ஏற்கனேவ, கம்போடியா, துபாய், சீனா ஆகிய நாடுகளில் இருந்து தமிழகம் வந்த நான்கு பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், அதன் எண்ணிக்கை தற்போது ஐந்தாக உயர்ந்துள்ளது.