சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட உமிழ்நீர் ART கருவி – PCR சோதனையைப் போலவே துல்லியமானது!

DUKE-NUS

சிங்கப்பூரில் உள்ள விஞ்ஞானிகள் உமிழ்நீர் ஆன்டிஜென் விரைவு சோதனை (ART) கருவியை உருவாக்கியுள்ளனர்.

இந்த உமிழ்நீர் ART சோதனை, PCR சோதனையைப் போலவே மிகவும் துல்லியமானது, மேலும் கோவிட்-19 முடிவை கண்டறிய இதுவரை சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே இது எடுத்துக்கொள்கிறது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் ஐந்து நோய்த்தொற்று பதிவு

சுயமாக பயன்படுத்தப்படும் இந்த சோதனை முறையில் 97 சதவீத துல்லிய விகிதத்தைக் பெற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சிறப்பு என்னவென்றால், இதனால் Omicron உட்பட பல்வேறு கோவிட்-19 வைரஸ் வகைகளைக் கண்டறிய முடியும்.

இந்த உமிழ்நீர் ஆன்டிஜென் விரைவு சோதனை (ART) கருவி இன்னும் மூன்று மாதங்களில் சந்தைக்கு வரலாம்.

Duke-NUS மருத்துவப் பள்ளி, சிங்கப்பூர் பொது மருத்துவமனை (SGH), சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் மையம் (NCCS) மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (NUS) ஆகியவற்றின் ஆராய்ச்சி ஒத்துழைப்பின் விளைவாக இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் ஐந்து நோய்த்தொற்று பதிவு