ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், சனிப்பெயர்ச்சி விழா!

Photo: Sri Vairavimada Kaliamman Temple

சிங்கப்பூரில் உள்ள 2001 லோர் 8 டோவா பயோக்கில் (2001 Lor 8 Toa Payoh) அமைந்துள்ளது ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (Sri Vairavimada Kaliamman Temple). இந்த கோயிலில், வரும் மார்ச் 29- ஆம் தேதி அன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

மார்ச் 29- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா!

சிங்கப்பூர் நேரப்படி, மார்ச் 29- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.36 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்கிறார். மார்ச் 29- ஆம் தேதி அன்று காலை 08.30 மணிக்கு சங்கல்பம், விக்னேஷ்வர பூஜையும், காலை 09.00 மணிக்கு கலச பூஜையும், காய்த்ரீ மந்த்ர ஹோமமும், காலை 09.30 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனையும், காலை 10.00 மணிக்கு நவகிரக தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், பால்குட அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு கலசாபிஷேகமும், காலை 11.15 மணிக்கு மஹா தீபாராதனையும், பிரசாதம் விநியோகமும் நடைபெறும்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்!

இரவு 07.00 சஹஸ்ரநாமமும், இரவு 07.45 மணிக்கு சிறப்பு பூஜையும், மஹா தீபாராதனையும், பிரசாதம் விநியோகமும் நடைபெறும். பால்குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 62595238 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தெரிவித்துள்ளது.