சிங்கப்பூரில் ‘சர்தார்’ திரைப்படம் வெளியானது- திரையரங்குகளின் பட்டியல்!

திரைப்பட இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ளது ‘சர்தார்’. இந்த படத்தை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது. இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, நடிகர் கார்த்தி முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தீபாவளியையொட்டி, ‘சர்தார்’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

வெளிநாட்டு ஊழியர்களை தங்கும் விடுதிக்கு நேரடியாக சென்று சந்தித்த MWC – 200 ஊழியர்களுக்கு தற்காலிக உணவு ஏற்பாடு

இந்த நிலையில், இன்று (21/10/2022) ‘சர்தார்’ திரைப்படத்தைத் திட்டமிட்டப்படி, உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை கார்த்திக்கின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, துபாய், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் சர்தார் படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதில், சிங்கப்பூரில் ‘சர்தார்’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். அதன்படி, Golden Village, Cathay Cineplex, Carnival Cinemas ஆகிய திரையரங்க நிறுவனங்களுக்கு சொந்தமான பெரும்பாலான திரையரங்குகளில் ‘சர்தார்’ திரைப்படம் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூரில் சர்தார் படத்தின் வெளியீட்டு உரிமையை xgen நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்: பாதுகாப்பு நடவடிக்கைள் தீவிரம்

டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள திரையரங்குகளின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று தெரிந்துக் கொள்ளலாம் என்த் தெரிவிக்கப்பட்டுள்ளது.