பொது பேருந்து ஓட்டுநர் இப்படி செய்யலாமா?? (வீடியோ) – போலீசில் புகார் செய்த குடும்பம்… மன்னிப்பு கேட்ட SBS டிரான்சிட்!

காரில் சென்ற குடும்பத்தை நோக்கி தவறான சைகை செய்து கேமராவில் சிக்கிய பேருந்து ஓட்டுநர் மீது SBS டிரான்சிட் நிறுவனம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளது.

அதாவது, கார் ஓட்டுநர் மற்றும் அவரது குடும்பத்தினரை நோக்கி நடுவிரலை காட்டிய போது அவர் கேமராவில் சிக்கியுள்ளார். பேருந்து ஓட்டுநர் ஏன் இப்படி செய்தார் என்று அவர்களுக்கே புரியவில்லை.

ஒரு குடும்பத்தையே திருப்பி போட்ட நிலச்சரிவு… சிங்கப்பூரில் பணிபுரிந்தவர், அவரின் மகன் பரிதாபமாக உயிரிழப்பு

மார்ச் 29 அன்று மாலை Tampines Avenue 7 இல் நடந்த இந்த சம்பவம், Roads.sg என்ற Facebook பக்கத்தில் வீடியோவை வெளியிட்ட பிறகு வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த வீடியோ, நேற்று புதன்கிழமை (ஏப். 6) ஆன்லைனில் பதிவேற்றப்பட்டது. இதில் அந்த கார் ஓட்டுநர், தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இருந்தார்.

பின்னர் இது குறித்து அவர் காவல்துறையில் புகார் பதிவு செய்ததாகவும், மேலும் SBS டிரான்சிட்டில் நிறுவனத்திடமும் புகார் அளித்ததாகவும் கார் ஓட்டுநர் கூறினார்.

SBS ட்ரான்சிட்டின் பெருநிறுவன தகவல்தொடர்புகளின் துணைத் தலைவர் திருமதி கிரேஸ் வு இது குறித்து கூறுகையில்; “சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனரின் நடத்தையை மன்னிக்க முடியாது,” என்றார்.

அது தொடர்பாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என்றும், “கார் ஓட்டுனருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்றும் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு… பாதிக்கப்படும் சிங்கப்பூர் வாசிகள்!