காரின் மீது பேருந்து மோதல்… தூக்கிவீசப்பட்ட கார் போக்குவரத்து விளக்கு கம்பத்தில் மோதி விபத்து (வீடியோ)

SBS Transit bus captain suspended accident beating red light

அங் மோ கியோவில் போக்குவரத்து சிவப்பு விளக்கு கம்பத்தில் கார் மோதி விபத்து ஏற்பட்டது.

கடந்த வியாழக்கிழமை (அக். 20) பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தில், கார் மீது பேருந்து முதலில் மோதியதால் கார் தடம்மாறி விளக்கு கம்பத்தில் மோதியது.

சம்பளம் சரியாக பெறாத வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஓடி உதவிய மனிதவள அமைச்சகம்: வாய்மூடி சம்பளத்தை கொடுத்த நிறுவனம்

இதில் விளக்கு கம்பம் சேதமடைந்ததை அடுத்து , கார் ஓட்டுநர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில், விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுநர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று SBS ட்ரான்சிட்டின் துணைத் தலைவர் திருமதி கிரேஸ் வு கூறினார்.

ஆங் மோ கியோ அவென்யூ 3 மற்றும் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்வேயில் (CTE) ஸ்லிப் ரோடு சந்திப்பில் அன்று மாலை 4.54 மணிக்கு விபத்து குறித்து தகவல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் 22 வயதான கார் ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

பயன்படுத்திய உள்ளாடைகளை அசல் வியர்வை வாசனையுடன் விற்கும் இளம்பெண்… அதற்கும் தேவை அதிகம் – முன்பதிவு அவசியமாம்