சிம் கார்டுகள் மூலம் பலே திட்டம்: வெளிநாட்டவர்கள் பலர் கைது – மலேசியாவிலும் அதிரடி ரைடு

Foreign worker jailed crime child pornography

சிங்கப்பூரர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 12 பேர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் உள்ள அவர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர்க் காவல் படை (SPF) நேற்று (பிப்ரவரி 19) தெரிவித்தது.

அதோடு மட்டுமல்லாமல் சிங்கப்பூரிலும் 14 பேர் கைது செய்யப்பட்டனர் அல்லது விசாரணையில் உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 10 அன்று ஜோகூரில் உள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளில் மலேசியா காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி 16 முதல் 27 வயதுக்குட்பட்ட 12 மலேசியர்களைக் கைது செய்தனர்.

அவர்கள் சிங்கப்பூரர்களை குறிவைத்து போலி தொலைபேசி அழைப்பு மோசடியில் ஈடுபட்டதாக கருதப்பட்டது.

அதாவது Prepaid சிம் கார்டுகளை பயன்படுத்தி இந்த மோசடி செயல் நடந்ததாக போலீசார் கூறுகின்றனர்.