சந்தேக நபர்கள் 325 பேரிடம் போலீசார் விசாரணை

job scam in singapore

சிங்கப்பூரில் மோசடி தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 325 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

போலீசார் இதுபற்றி கூறுகையில் அதில் 226 பேர் ஆடவர்கள் என்றும், மீதமுள்ள 99 பேர் பெண்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அல்ஜுனீட் ஆறாவது மாடி வீட்டில் தீ விபத்து: 13 பேர் வெளியேற்றம்

மேலும், அவர்கள் 16 – 73 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

இதில் பண மோசடி, உரிமம் இல்லா கட்டணச் சேவை, கள்ள பணமாற்று மோசடி ஆகியவை அடங்கும்.

இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்ட நபர்கள் மொத்தம் S$8.9 மில்லியனுக்கு மேல் இழந்துள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்கள் நிரூபணமால், 10 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் விதிக்கப்படலாம்.

இளம்பெண் ஒருவரை கடுமையாக தாக்கிய மூன்று டீன்ஏஜ் பெண்கள் கைது – வீடியோ வைரலானதால் அதிரடி