மோசடி: 251 சந்தேக நபர்களிடம் காவல்துறை விசாரணை…

Man pleads guilty to sharing porn on WhatsApp

மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 251 பேர் விசாரிக்கப்படுவதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) இன்று (ஜன. 16) தெரிவித்துள்ளது.

வர்த்தக விவகாரம் மற்றும் ஏழு காவல் தரைப் பிரிவுகள், தீவு முழுவதும் மேற்கொண்ட இரண்டு வார அமலாக்க நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் பிடிபட்டனர்.

சிங்கப்பூரில் நடைபாதையில் சென்ற சிறுமி மீது சைக்கிளில் மோதிய ஆடவர் கைது

இதில் விசாரணையில் உள்ள அவர்கள் 15 முதல் 74 வயதுக்குட்பட்டவர்கள் என்று SPF தெரிவித்துள்ளது.

முக்கியமாக இணைய காதல் மோசடிகள், ஈ-காமர்ஸ் மோசடிகள், சமூக ஊடக ஆள்மாறாட்டம் மோசடிகள், போலி சூதாட்ட தளம் மற்றும் கடன் மோசடிகளை அவை உள்ளடக்கியுள்ளது.

அதாவது மொத்தம் 421 மோசடிகளில் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் S$3.5 மில்லியனுக்கும் அதிகமாக இழந்ததாக SPF கூறியுள்ளது.

மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைத்து அபராதம் விதிக்கப்படலாம்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் நடவடிக்கைகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் S$500,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

உரிமம் இல்லாமல் 47 காற்றழுத்த துப்பாக்கி வைத்திருந்த ஆடவர் கைது