சிங்கப்பூரில் “பொது எச்சரிக்கை ஒலி” – பிப்.15ம் தேதி அன்று முழு தற்காப்பு தினம்

SCDF to sound signal islandwide on Feb. 15, 6:20pm for Total Defence Day

சிங்கப்பூரில் வரும் பிப். 15ம் தேதி மாலை அதிக சைரன் ஒலியை நீங்கள் கேட்டால் பீதி அடைய வேண்டாம்.

பிப். 15 மாலை 6.20 மணிக்கு, தீவு முழுவதும் PWS சைரன்கள் மூலம் முக்கிய தகவல் ஒலியை சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை எழுப்பும்.

சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் இனி “தானியங்கு பாதைகள்” – முன்பதிவு, பாஸ்போர்ட்டை தேவையில்லை

 

ஆண்டு தோறும் பிப்ரவரி 15 மற்றும் செப்டம்பர் 15 ஆகிய தேதிகளில் மாலை 6.20 மணிக்கு தீவு முழுவதும் இந்த பொது எச்சரிக்கை ஒலியை SCDF எழுப்பும் என்பது அறிந்தது தான்.

அப்போது, SGSecure செயலி பதிவிறக்கம் செய்யப்பட்ட கைப்பேசி மற்றும் Silent அல்லது Vibration தேர்வு செய்யாமல் இருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த எச்சரிக்கை ஒலிக்கும்.

எச்சரிக்கை ஒலியை நீங்கள் கேட்கும்போது, இரண்டு நிமிட செய்தியை பெற ஏதேனும் உள்ளூர் வானொலி நிலையம் அல்லது தொலைக்காட்சி சேனலுடன் உடனடியாக இணையுங்கள்.

ஏன் இந்த ஒலி?

1942ஆம் ஆண்டில் ஜப்பானியர்களிடம் சிங்கப்பூர் வீழ்ந்த நாளான பிப்ரவரி 15ம் தேதி, சிங்கப்பூரின் “முழு தற்காப்பு தினம்” ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும், அந்த தினத்தை நினைவுகூரும் வகையில் பொது எச்சரிக்கை அமைப்பின் முக்கிய செய்தி ஒலிக்கப்படுகிறது.

நண்பர்களுடன் மது அருந்திவிட்டு போதையில் குளிக்க சென்ற ஆடவர் மரணம்