சிங்கப்பூரில் தீடீர் வெள்ளம்: நீரில் மூழ்கிய வாகனங்கள்…சிக்கிக் கொண்டவர்களை மீட்ட SCDF வீரர்கள்.!

SCDF rescues 5 people
Pic: DAN CHONG/FB

சிங்கப்பூரில் இன்று (20-08-2021) காலை சில பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக தீடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Tampines Avenue 10-ல் உள்ள சாலைகள், TPE விரைவுச்சாலையை நோக்கி செல்லும் பாசிர் ரிஸ் டிரைவ் 12 ஆகிய இடங்களிலும்  வெள்ளம் ஏற்பட்டது.

தீடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக Tampines Avenue 10-ல் உள்ள சாலைகள், பாசிர் ரிஸ் டிரைவ் 12 ஆகிய  பகுதிகளிலிருந்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு உதவிகள் கேட்டு அழைப்புகள் வந்தது.

சிங்கப்பூரில் கனமழை: சாலைகளில் ஏற்பட்ட தீடீர் வெள்ளம்.! (காணொளி)

இதையடுத்து, வெள்ள பாதிப்பு இடத்திற்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் விரைந்தனர், தீடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் 13 வாகனங்கள்  பாதியளவிற்கு தண்ணீரில் மூழ்கியிருந்தன, அதிகாரிகள் வரும் முன்னரே சுமார் 25 பேர் வெள்ளம் ஏற்பட்ட இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறினர்.

தெம்பனிஸ் IKEA அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் வாகனங்களில் சிக்கிய 5 பேரைக் SCDF வீரர்கள் பாத்திரமாக மீட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் கால் வலி காரணமாக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக, Tampines Avenue 10 சாலையின் 4 தடங்களிலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதால், அதைத் தவிர்க்கும்படி தேசிய நீர் நிறுவனமான PUB வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியது.

மேலும், தெம்பனிஸ் விரைவுச்சாலையில் இருந்து Tampines Avenue 10 வெளிவாயிலுக்குச் செல்லும் வழிகள், தடங்கல் காரணமாக மூடப்பட்டிருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.

வெளிநாடுகளில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் கவனத்திற்கு..!