வெளிநாடுகளில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் கவனத்திற்கு..!

(Photo: TODAY)

வெளிநாடுகளில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், விரைவில் பாதுகாப்பு சலுகை நடவடிக்கைகளுக்கு தகுதி தகுதிபெறுவர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) அறிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை இரவு 11.59 முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காேவிட் தடுப்பூசியால் கடுமையான பக்கவிளைவு – 144 பேருக்கு மொத்தம் S$782,௦௦௦ நிதியுதவி

உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசர பயன்பாட்டுப் பட்டியலின்கீழ், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட புதிதாக வந்த பயணிகளுக்கு “டேம்பர்-ப்ரூஃப்” என்னும் தடுப்பூசி ஸ்டிக்கர்களை குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA) வழங்கும்.

இந்த ஸ்டிக்கர்கள் பயணிகளின் பாஸ்போர்ட்டில் ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்டிக்கரைப் பெற, பயணிகள் சிங்கப்பூருக்கு வரும்போது, ஆங்கில மொழி தடுப்பூசி சான்றிதழை ICA அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

WHOன் அவசர பயன்பாட்டுப் பட்டியலில் உள்ள தடுப்பூசிகளில், ஃபைசர்-பயோஎன்டெக்/கொமர்னாட்டி, மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca), சினோவாக்-கரோனாவாக் மற்றும் சினோஃபார்ம் (Sinopharm) ஆகியவை அடங்கும்.

சிங்கப்பூரில் அங்கீகாரம் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி உடையோர், ஆகியோருக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் தென்படும் நாகப்பாம்பு (காணொளி)… சுமார் 200 புகார்கள் பதிவு