சிங்கப்பூரில் தென்படும் நாகப்பாம்பு (காணொளி)… சுமார் 200 புகார்கள் பதிவு

NParks receives 200 reports cobra sightings
Photo: Ramzul Ihsan/Facebook

சிங்கப்பூரில் கடந்த 1 வருடத்தில், நாகப்பாம்பு தென்பட்டது தொடர்பான சுமார் 200 கருத்து பதிவுகள் பெற்றுள்ளதாக NParks தெரிவித்துள்ளது.

உள்ளூர் மலாய் செய்தி நிறுவனமான Beritamediacorp-ன் கேள்விகளுக்கு NParks பதிலளித்துள்ளது.

இந்தியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறிய இருவருக்கு சிறைத் தண்டனை

சோவா சூ காங், பிளாக் 24 புசாரா அமனில் உள்ள முஸ்லீம் சமூக கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட நாகப்பாம்பின் வைரல் காணொளி கடந்த ஆகஸ்ட் 13 அன்று வெளியிடப்பட்டது.

அந்த பாம்புகளை சீண்டாமல் இருந்தால் மற்றவர்களை தாக்காது என்றும் NParks கூறியுள்ளது.

அதனை நாம் அச்சுறுத்துவதாக உணர்ந்தால், அது விஷத்தையும் துப்பும் வாய்ப்பு உள்ளதாகவும் அது எச்சரித்துள்ளது.

அதே போல, பாம்பு தாக்குதல்களால் இதுவரை யாரும் காயமடைந்த சம்பவங்கள் ஏதும் இல்லை என்பதும் உறுதிப்படுத்தபட்டுள்ளது.

கனமழையைத் தொடர்ந்து, வேன் மீது விழுந்த 7 மாடி உயர மரம்…