காேவிட் தடுப்பூசியால் கடுமையான பக்கவிளைவு – 144 பேருக்கு மொத்தம் S$782,௦௦௦ நிதியுதவி

Photo: Getty

காேவிட்-19 தாெற்றிலிருந்து பாதுகாப்பதற்காக போடப்படும் தடுப்பூசியால் கிட்டதட்ட 144 பேர்க்கு கடும் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.

இதுப்பாேன்று தடுப்பூசியால் கடும் விளைவுக்கு ஏற்பட்ட இருவருக்கு தலா S$225,000 நிதியுதவி வழங்கியுள்ளதாகவும், இச்சூழ்நிலையிலேயே வழங்கப்பட்ட தொகையிலேயே அதிகளவிலான தாெகை இதுதான் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் சில மாதங்களிலேயே தடுப்பூசிக்கான விளைவுகளுக்கு நிதியுதவி திட்டம் (விஐஎஃப்ஏபி) ஆரம்பிக்கப்பட்டது.

முதல் கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட 16 வயதுடைய ஒரு இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார். மற்றொரு நபரைப் பற்றி சுகாதார அமைச்சு ஏதும் குறிப்பிடவில்லை.

சிங்கப்பூரில் தென்படும் நாகப்பாம்பு (காணொளி)… சுமார் 200 புகார்கள் பதிவு

“விஐஎஃப்ஏபி” திட்டத்தினால் இதுவரை விண்ணப்பித்தவர்களில் 144 பேருக்கு மொத்தம் S$782,000 வழங்கபட்டுள்ளது அல்லது வழங்கப்படவுள்ளது.

தடுப்பூசிப் பாேட்டுக் கொண்டு கடும் விளைவுகள் ஏற்பட்டோருக்கு உதவியாகவும், அவர்களுக்கு இத்திட்டம் மிகுந்த மனஅமைதியை தரும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

வழங்கப்படும் உதவித்தொகை பக்கவிளைவின் கடுமையைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என்றும், இப்பக்கவிளைவுகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சு தனது இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

பிரிவு 1

தடுப்பூசியால் மரணம் அல்லது நிரந்தரமாக கடும் உடற்குறைபாடோ ஏற்பட்டால் ஒருமுறை மட்டும் S$225,000 நிதியுதவி வழங்கப்படும்.

பிரிவு 2

தடுப்பூசியால், மருத்துவமனையில் உயர்நிலை சிகிச்சை அல்லது தீவிர சிகிச்சையில் சேர்த்து குணமடையக் கூடியவர்களுக்கு மட்டும் S$10,000 நிதியுதவி வழங்கப்படும்.

பிரிவு 3

தடுப்பூசியால், மருத்துவமனையின் உள்நோயாளிச் சேவையையும், மருத்துவ சிகிச்சையையும் பெற்று குணமடையக் கூடியவர்களுக்கு மட்டும் S$2,000 நிதியுதவி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.