பயணப்பைகளை எடுத்துவர முடியாமல் தவித்த ஸ்கூட் பயணிகள்: இந்தியாவில் தரையிறங்கிய விமானம் – கடும் வெப்பம் தான் காரணம்

பயணப்பைகளை எடுத்துவர முடியாமல் தவித்த ஸ்கூட் பயணிகள்: இந்தியாவில் தரையிறங்கியது - கடும் வெப்பம் தான் காரணம்
Photo: FlyScoot

சிங்கப்பூர் வந்த இரு ஸ்கூட் விமானங்களில் பயணம் செய்த பயணிகள் தங்கள் பயணப்பைகளை உடன் எடுத்துவர முடியாமல் போனது.

ஏதென்ஸிலிருந்து சிங்கப்பூர் செல்லும் குறைந்தபட்சம் இரண்டு ஸ்கூட் விமானங்களில் பயணம் செய்த பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

லிட்டில் இந்தியாவில் உள்ள நாணய மாற்று வர்த்தகரிடம் கைவரிசை… கள்ள பணத்தை கொடுத்து நல்ல பணமாக மாற்றிய இரு வெளிநாட்டவர்

கிரீஸ் பகுதியில் நிலவிய வெப்பம் விமானத்தின் செயல்திறனைப் பாதித்தது தான் அதற்கான காரணம் என சொல்லப்பட்டுள்ளது.

மேலும், வழக்கமாக இடைநில்லா சேவை வழங்கும் மற்றொரு ஸ்கூட் விமானம் ஏதென்ஸிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டபோது, எரிபொருள் நிரப்ப இந்தியாவின் அமிர்தசரஸில் தரையிறக்க வேண்டியிருந்தது.

பயணப்பைகளை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக குறைந்த அளவில் எரிபொருள் நிரப்பி சென்றதால், இடையில் இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

தீவிர வெப்பநிலை தான் இந்த இடையூறுகளுக்கு காரணம் என்று ஸ்கூட் விமான நிறுவனம் கூறியது, அங்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாக உள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

பயணப்பைகளை பயணிகளின் இருப்பிடத்துக்கே கொண்டுபோய் சேர்க்க அந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“வெளிநாட்டு ஊழியர்களுக்காக இதை செய்தாக வேண்டும்” – நாளுக்கு நாள் வலுக்கும் கோரிக்கை