சிங்கப்பூரில் சட்டவிரோத ரகசிய குழுவினர் என்ற சந்தேகத்தில் 26 பேர் அதிரடி கைது

Pexels

சிங்கப்பூரிலுள்ள பொது பொழுதுபோக்கு மற்றும் இரவு கேளிக்கை விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு வார சோதனை நடவடிக்கையில் 32 பேர் சிக்கினர், அவர்களிடம் விசாரணைக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில் 16 முதல் 41 வயதுக்குட்பட்ட 26 பேர் சட்டவிரோதமான ரகசிய குழுவினர் என்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதர்களுக்குள் கிடந்த சடலம்…துப்புரவு ஊழியர் கொடுத்த புகார் – விசாரணை நடத்தி வரும் போலீஸ்!

மேலும், 26 ஆண்களில் ஒருவரைக் கைது செய்யும் போது பிரச்சனை செய்த மேலும் மூன்று பேர், அதாவது ஆடவர் ஒருவர் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனை நடவடிக்கை கடந்த பிப்ரவரி 25 முதல் மார்ச் 11 வரை நடத்தப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 100 இடங்கள் சோதனை செய்யப்பட்டதாக போலீசார் நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 22) தெரிவித்தனர்.

மேலும் போலீசாரால் தேடப்பட்டு வந்த 29 மற்றும் 32 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத ரகசிய குழு உறுப்பினராக இருந்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$5,000 வரை அபராதம் அல்லது இரண்டையும் எதிர்கொள்ள நேரிடலாம்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஊழியர் கைது – இதுபோன்ற தவறிழைக்காமல் எச்சரிக்கையாக இருங்கள்!