சிங்கப்பூரில் 400 வேலையிடங்களில் பாதுகாப்புச் சோதனை!

(Photo: TODAY)

மனிதவள அமைச்சு 400 வேலையிடங்களில் பாதுகாப்புச் சோதனைகளை அடுத்த மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதிக ஆபத்துகள் நிறைந்த துறைகளான கட்டுமானம், உற்பத்தி போன்ற வேலையிடங்களில் இந்த பாதுகாப்புச் சோதனைகள் நடத்த இருப்பதாகவும் இதற்க்கு “ஆப்ரேஷன் ஐபிஸ்” என பேரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி செல்லும் லாரியும் மற்றொரு லாரியும் மோதி விபத்து – ஒருவர் மரணம்

இந்த பாதுகாப்புச் சோதனையானது பொதுவாக நடத்தப்படும் சோதனைகளுடன் நடத்தப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் இத்துறையில் அதிக உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு இத்துறைகளில் தமது அமைச்சு அதிக கவனம் செலுத்தும் என்றும் மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது கூறியுள்ளார்.

உற்பத்தி துறையைச் சார்ந்த வேலையிடங்களில் மற்ற துறைகளை ஒப்பிடுகையில் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், 110 ஊழியர்களுக்கு அதிகமான காயங்களும் 2,300க்கு மேற்பட்டோருக்கு இலேசான காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில் 48 ஊழியர்களுக்கு கை, கால் இழப்பு ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த நிலை கவலை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து வந்த சரக்கு கப்பல் மோதியதில் தமிழக மீனவர்கள் 4 பேர் மரணம்!