வேலையில் இருந்த ஊழியர் சுப்ரமணியை கடுமையாக தாக்கிய ஓட்டுநர் – போலீஸ் விசாரணை

Security guard attacked at logistics hub in Jurong
(Photos: Facebook/Union of Security Employees)

ஜூரோங்கில் உள்ள தளவாட நிலையத்தில் 51 வயதான திரு சுரேஷ் சுப்ரமணியம் என்ற தமிழ் ஊழியரை, லாரி ஓட்டுநர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

கடந்த வியாழன் (அக். 13) அன்று நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் புகாரை பெற்றுள்ளனர். மேலும், லாரி ஓட்டுனரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை – நவ. மாதம் வரை கூட நீடிக்கலாம்!

இந்த சம்பவம் குறித்து அறிந்திருப்பதாகவும், மேலும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகவும் பாதுகாப்பு ஊழியர்களின் ஒருங்கிணைந்த அமைப்பு (USE) பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஸ்பியர் செக்யூரிட்டி ஃபோர்ஸில் பணிபுரியும் திரு சுரேஷ் கடந்த வியாழன் அன்று காலை 9.20 மணியளவில் பயனீயர் கிரசண்டில் அமைந்துள்ள தளவாட நிலையத்தில் பணியில் இருந்தார்.

அப்போது முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு லாரி ஓட்டுனருக்கு திரு. சுரேஷ் அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஓட்டுநர் சுரேஷ் மீது கோபமடைந்து சத்தம் போட்டதாகவும் பின்னர் அவரை தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சுரேஷ் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றார், மூன்று நாட்கள் அவருக்கு விடுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

தாக்கிய நபர் விசாரணைகளில் உள்ளார்.

120கி எடையுடன் அவதிப்பட்ட ஆடவர்.. “இதனால் குடும்பத்தில் பிரச்சனை, மனக்கவலை” – தற்போது 50கி எடை குறைத்து அசத்தல்