செக்யூரிட்டியை தாக்கிய நபர்! – போலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் குற்றவாளி

security abuse lift singapore police
சிங்கப்பூரில் உள்ள கண்டோமினியத்தில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதாக சமீபத்தில் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.ஆகஸ்ட் 29-ஆம் தேதி சம்பவம் நடந்ததாக பாதுகாப்பு ஊழியர் சங்கத்தின் (USE) முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 வயதான பாதுகாப்பு ஊழியர் மற்றொரு ஊழியருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது,அவர்கள் லிப்டில் நுழைந்து மற்றொரு நபரை எதிர்கொண்டனர்.அந்த நபர் எந்தவிதத் தூண்டலுமின்றி பாதுகாப்பு ஊழியரைத் தாக்கியதாக USE தெரிவித்துள்ளது.

தாக்குதலில் சிறிய காயங்களை ஊழியர் சந்தித்துள்ளார்.மேலும்,அவருக்கு மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 29 ஆம் தேதி நள்ளிரவு 12:40 மணியளவில் புக்கிட் பாடோக் ஸ்ட்ரீட் 41 இல் தாக்குதல் தொடர்பான வழக்கு குறித்து எச்சரிக்கப்பட்டதாக காவல்துறை கூறியது.பாதுகாப்பு ஊழியரை தாக்கி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 45 வயது நபர் போலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுகிறார்.

பாதுகாப்பு அதிகாரிகள், அதன் ஹெல்ப்லைன் 6291 5145 அல்லது அதன் மின்னஞ்சல் use@ntuc.org.sg மூலம் குற்றச்சம்பவங்களை புகாரளிக்கலாம். தாக்குதலுக்கான தண்டனை S$7,500 அபராதம் மற்றும்/அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.