பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ் ஊழியர் மீது வாகனத்தை விட்டு ஏற்றியதாக ஆடவர் மீது புகார்

Photo: Union of Security Employees/Facebook

சிங்கப்பூரில் பாலஸ்டியர் ரோடு ஜாலான் ராஜா பகுதியில் அமைந்துள்ள ஸ்கைசூட்ஸ் 17 காண்டோமினியம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரியின் கால் மீது வாகனத்தை கொண்டு இடித்து சென்ற ஆடவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது கடந்த மாதம் 16ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. காண்டோமினியத்திற்குள் நுழையும் ஒவ்வொரு வாகனத்தையும் சரிபார்ப்பது மற்றும் அத்துமீறி நுழைபவர்களை கண்காணிப்பது மற்றும் ரோந்து செல்வதே இவரின் பணி.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்!

பணியில் இருந்த திருவாட்டி ச. கவிதா சந்திரசேகரன் அந்த ஆடவரின் அடையாளத்தை சரிபார்க்க முயற்சித்தபோது அந்த நபர் அவளது வலது காலின் மீது வாகனத்தை ஓட்டியும் வாய்மொழி துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்த பாதுகாப்பு அதிகாரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் மீண்டும் பணிக்கு வந்ததாக பாதுகாப்புத்துறை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பணியில் இருக்கும் அதிகாரிகள் மீது இவ்வாறு நடந்துக்கொள்வது ஏற்று கொள்ளமுடியாத ஒன்று என பாதுகாப்புத்துறை ஊழியர்கள் சங்கம் கூறப்பட்டுள்ளது.

கோவிட் இருக்கா ? ART கிட் மூலம் நீயே வீட்டுல பரிசோதனை பண்ணிக்கோ ! – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சுகாதார அமைச்சகம்