மது அருந்துவோருக்கு வந்தது புதிய திருத்த சட்டம்: 2024 ஜனவரி 2 முதல்… மீறினால் நடவடிக்கை

selling-liquor-rules-amendment

இணையம் அல்லது தொலைத்தொடர்பு சேவைகள் மூலம் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விநியோகம் செய்வது 2024 ஜனவரி 2 முதல் குற்றமாகும்.

அதாவது Shopee மற்றும் GrabFood போன்ற மின்னணு வணிக தளங்கள், பொதுமக்கள், வர்த்தகங்கள் உட்பட இணையம் அல்லது தொலைத்தொடர்பு சேவை வழியாக இனி மதுபானம் விநியோகம் செய்ய உரிமம் தேவை.

வெளிநாட்டு ஊழியர்களே ரெடியா.. இந்தியா vs ஆஸி. இறுதி போட்டியை பெரிய திரையில் காண அரிய வாய்ப்பு – என்ன செய்ய வேண்டும்?

தொலைத்தொடர்பு சேவைகள் எதை குறிக்கிறது என்றால்; தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற இணைய அடிப்படையிலான செய்தி அனுப்பும் சேவைகளை அது குறிக்கின்றது.

விநியோகம் செய்வோர் மற்றும் மின்னணு வணிக தளங்கள், மது வாங்கும் நபர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்கள் 18 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தால் மதுபானம் வாங்குவது சட்டப்படி குற்றமாகும் என்று அவர்களுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும்.

மேலும், அவ்வாறு செய்வதால் என்ன தண்டனையை சந்திரிக்க நேரிடும் என்பதையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

விதிகளை மீறும் குற்றவாளிகளுக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்த சட்டம் விநியோகம் செய்வோருக்கும் பொருந்தும்.

உள்துறை அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் காவல்துறை ஆகியவை ஒழுங்குமுறைத் தேவைகளை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, மது கட்டுப்பாடு (வழங்கல் மற்றும் நுகர்வு) (மதுபான உரிமம்) விதிமுறைகள் 2015 இல் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Bricks-and-mortar கடைகளில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் லாட்டரியில் இலகுவாக வெல்ல… ஜோசியம் பார்த்து “4D அதிஷ்ட எண்கள்” கொடுக்கும் ஆடவர்