இயந்திரத்தில் தலை சிக்கி மரணித்த வெளிநாட்டு ஊழியர் – இயந்திரத்தை பராமரிக்கவில்லை என்பதே உண்மை…

வெளிநாட்டு ஊழியர்
Foursquare and WSH Council

அட்டைப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தில் தலை நசுக்கப்பட்டதில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றியிருந்தால், இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என்று மரண விசாரணை நீதிமன்றம் கூறியது.

மது அருந்துவோருக்கு வந்தது புதிய திருத்த சட்டம்: 2024 ஜனவரி 2 முதல்… மீறினால் நடவடிக்கை

இந்த மரணம், வேலையிடத்தில் ஏற்பட்ட தவறுதலால் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அதிகாரி ஆடம் நகோடாவின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.

உயிரிழந்த 34 வயதான சன் ஜைடாவோ என்ற அந்த ஊழியர் சீன நாட்டை சேர்ந்தவர் என சொல்லப்பட்டுள்ளது.

இயந்திர முகப்பு ஜன்னல் வழியாக தலையை சாய்த்து பார்த்தபோது அவரின் தலை இயந்திரத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

17 செனோகோ லூப்பில் (Senoko Loop) அமைந்துள்ள AMB பேக்கேஜிங், பேப்பர் மற்றும் கார்ட்போர்டு கன்டெய்னர் மற்றும் பாக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் சன் பணியாற்றினார் என்று சிஎன்ஏ தெரிவித்துள்ளது.

அவர் அந்த இயந்திரத்தை இயக்குவதில் நன்கு பயிற்சி பெற்ற, திறமையான ஊழியர் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த பிப். 11 அன்று மாலை சுமார் 4:20 மணியளவில் நடந்ததாகவும், சிசிடிவி காட்சிகளில் உண்மை தெரியவந்ததாகவும் சிஎன்ஏ தெரிவித்துள்ளது.

இயந்திரத்தின் முகப்பு ஜன்னலில் இன்டர்லாக் எனும் பாதுகாப்பு அம்சம் இருந்தது, அதாவது முகப்பு ஜன்னலைத் திறந்தால் இயந்திரம் இயங்காது என்பது பொருள்.

ஆனால் இன்டர்லாக் பாதுகாப்பு அம்சம் செயல்படாமல் சேதமடைந்து இருந்ததாகவும் விசாரணையில் மனிதவள அமைச்சகம் (MOM) கண்டறிந்ததாக CNA தெரிவித்துள்ளது.

அது முறையாக பராமரிக்கப்பட்டு இருந்திருந்தால் அவர் உயிர் அநியாயமாக போயிருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

சர்க்யூட் சாலை அருகே இறந்து கிடந்த ஆடவர்: “சொந்தம் யாரும் இல்லை” – போலீஸ் விசாரணை