ஆந்திரப் பிரதேசத்தில் மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது ‘Sembcorp Energy India’!

Photo: Sembcorp Energy India Limited

சிங்கப்பூரில் செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸிற்கு (Sembcorp Industries) சொந்தமான செம்ப்கார்ப் எனர்ஜி இந்தியா (Sembcorp Energy India) நிறுவனம், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மின் விநியோக நிறுவனங்களுக்கு 625 மெகாவாட் மின்சாரம் வழங்க, நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் மகன்கள்…கொலை செய்யப்பட்ட விவசாயி தந்தை – போலீசார் தீவிர விசாரணை

12 ஆண்டு கால ஒப்பந்தம் 2023 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மெயின்போர்டில் பட்டியலிடப்பட்ட செம்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் (Mainboard-Listed Sembcorp Industries) பங்குச் சந்தையில் தெரிவித்துள்ளது.

இதற்காக, ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்ப்கார்ப் எனர்ஜி இந்தியாவின் 2.6 ஜிகாவாட் சூப்பர் கிரிட்டிகல் (2.6 Gigawatt Supercritical Power) மின் உற்பத்தி வசதியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், செம்கார்ப் எனர்ஜியின் அனல் மின்நிலையத் திறனில் 77 சதவீதம் நீண்ட மற்றும் இடைக்கால பிபிஏக்களால் ஆதரிக்கப்படும் என்று செம்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

‘திருச்சி வழியாக திருப்பதி மற்றும் சிங்கப்பூர் இடையே விமான சேவை’- இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

செம்கார்ப் இண்டஸ்ட்ரீஸின் தெற்காசியப் பிரிவின் தலைமை நிர்வாகி விபுல் துலி (Vipul Tuli, chief executive of Sembcorp Industries’ South Asia) கூறியதாவது, “புதுப்பிக்கத்தக்க சக்தியில் செம்கார்ப் தனது இருப்பைத் தீவிரமாக அதிகரித்து வரும் நேரத்தில், இந்த நீண்ட கால பிபிஏ ஒப்பந்தம், எங்கள் வழக்கமான உற்பத்தித் திறனை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்யும். ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான பயணத்தில் எங்கள் கூட்டாண்மை தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்தார்.

ஒப்பந்தம் காரணமாக, ஜனவரி 4- ஆம் தேதி அன்று செம்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை 2.5% அதிகரித்து 2.06 சிங்கப்பூர் டாலராக பதிவானது.

சிங்கப்பூரில் இருந்து வந்தவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதி – தொடரும் பரிசோதனை

சுற்றுச்சூழலுக்கு உகந்த காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக செம்ப்கார்ப் திகழ்கிறது.